ஒரு கத்துக்குட்டி வாசகனின் புத்தக விமர்சனம்…

ஏன் கங்காவை அப்படி செய்துவீட்டீர்கள் என்று கடிதம் மூலம் கேட்க வேண்டும் என்று ஓர் ஆதங்கம்.

38 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும், கதையில் வரும் பைகிராப்ட் ரோடு, பீச் ரோடு, புகாரி ஓட்டல், தஞ்சை பெரிய கோவில், சிவகங்கை பூங்கா, மேலவீதி என்று எல்லாம் நான் கண்டவையே. கங்காவை போல், பிரபுவைப்போல், கனகத்தைப்போல்  கணேசனைப்போல், அம்புஜம் மாமி போல், விச்சுவைப்போல், மீனாவைப்போல், எத்தனையோ பேர் என்னைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். ஆத்மாக்கள்.

நல்லவன் கெட்டவன் ஆகிறான் போன்ற ஓர் உணர்வு. கெட்டவன் நல்லவன் மாதிரி ஆகிவிட்டான் என்ற ஓர் நினைப்பு. மாதிரித்தான். சாத்தான் வேதம் ஓதுவது போல், க்ளைமாக்சில் பிரபுவின் அறிவாளத்தனமான பேச்சு ஒரு கத்தியை எடுத்து அவனை குத்திவிடலாம் போல என்ற ஓர் எண்ணம். ஆனால், மனிதனின் ஆத்மாக்களை நான்-டைணமிக்காக காட்டியதும், அவர்களின் பிகேவியர்ஸ் மாறுவதை டைணமிக்காக காட்டியதும் ஓர் வித தனி சிறப்பு, 400 பக்கங்களை படித்த களைப்பே தெரியவில்லை. கதையின் ஓட்டம், எத்தனை தலைமுறை வாசகர்கள் படித்தாலும் அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கும். 38 வருடத்திற்கு பின் இதை படிக்கும் நான் முதலில் நான் அடிமையானது அவருடைய கதாபத்திரத்திற்கோ அல்லது கதை வடிவத்திற்கோ இல்லை.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற தலைப்பிற்கு மட்டுமே. எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு தலைப்பு. கதையும் தான்.

காலை எழுந்தவுடன், பிரபுவின் ஒயின் கேஸ், கங்காவின் டிராண்ஸ்ஸிஸ்டர் எனது வீட்டிலேயே எங்கேயோ இருக்கின்றது போன்ற ஓர் நினைவு. இந்த இடத்தில்தான் ஒரு எழுத்தாளனும் படைப்பாளியும் வெற்றி பெருகிறான்.

கத்துக்குட்டி வாசகனான நான் ஜெயகாந்தனை வருணிக்க தகுதியில்லாதவன். அவர் கதையில் வருவது போல் நானும் ஒரு ஆத்மாதானே.

index

Advertisements

One thought on “ஒரு கத்துக்குட்டி வாசகனின் புத்தக விமர்சனம்…

  1. நல்ல விமர்சனம். 1974இல் வெளிவந்த கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலமாக இந்நூலைப் பற்றி அறிந்து அப்போது படித்தேன். பாலசந்தரின் தாக்கமோ என்னவோ எனக்கு ஜெயகாந்தனின் இந்நூல் பிடித்திருந்தது.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s