சுடுகாட்டில் உறங்கும் மதுசூதனன் !

5 முதல் 8 வருட கடின படிப்பு
மூன்று அடுக்கு இலக்கு
மூன்றாம் அடி சறுக்கினால்
முதலாம் அடியிலிருந்து பயணம்
மறுபடியும்

மூன்று அடுக்குகளையும் முடித்தால்
ஏதோ ஒரு இலாக்காவில் பயிற்சி

சைரன் வைத்த வண்டி
தங்க பங்களா வசதி
எப்போதும் வேலைக்கு ஆள்
கை தட்டினால் வேலை நடக்கும்
செல்வாக்கை வைத்து வேலை
முடியும் – சொந்த வேலையும் சேர்த்து.

காலை எழுந்தது முதல்
இரவு படுக்கை வரை தாங்குவதற்கு
ஆட்கள்…

ஊரே மின்சாரம் இல்லாமல்
அவதித்தாலும்… அறையில் என்றுமே
குளிரூட்ட வசதிகள்..
பர்மா தேக்கு கட்டில்..
இலவம்பஞ்சு மெத்தை …

ஒரு அரசாங்க ஊழியனைவிட
பல மடங்கு சொகுசு வாழ்க்கை…
அந்த வாழ்க்கையை விட்டு
சுடுகாட்டில் உறங்கும் இவரை

என்னவென்று அழைப்பது ?

Sagayam_2547185f
சுடுகாட்டிலேயே கட்டில் போட்டு உறங்கும் மதுசூதனன். இதுவும் அனந்த சயனம் தான்!
Advertisements

2 thoughts on “சுடுகாட்டில் உறங்கும் மதுசூதனன் !

 1. கடமையும் நேர்மையும் மறந்த
  கயமை அதிகாரிகள் நடுவே
  இவரது அயராதக் கடமைகளும்
  தொண்டினைப் போல் போற்றப்படுகின்றன..
  ஆம் இவர் ஒரு முட்டாள் IAS அதி காரி தான்.
  “அம்மணமாகத் திரியும் ஊரில்,
  கோவணம் கட்டியவன்
  பைத்தியக்காரன்!” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
  “நேர்மையும் துணிச்சலும் மிகுமின்
  அசாத்தியமான வெற்றி
  சாத்தியமே” என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகிறார் திரு.சகாயம் IAS அவர்கள். ‘சமூகத்தில் ஊழலற்ற சூழலியல்’ என்ற இலக்கை நோக்கிய அவரது பயணத்தில், தடைகள் தகர்த்து வெற்றியடைய விரும்பும் ஓர் சராசரி இந்தியக் குடிமகனாய், எல்லாம் வல்ல இறைவனை வாழ்த்தி வணங்குகிறேன் _/\_

  #Salute_Sagaayam_SIR

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s