மால்கம் எக்ஸ் – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடிவெள்ளி !

உனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கொள். மற்றவர்களிடம் இருந்து சிறிய அளவிலாவது மாறுபடு. நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கவேண்டும். அதிர்ச்சியில் அவர்களை வாயடைக்கப்படவேண்டும். மற்றவர்கள் செய்யாமல் விட்டது எது என்பதை கண்டறிந்து முதலில் செய்துவிடவேண்டும். மால்கம் இதனை அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டான். நீ விசேஷமானவன்.

மால்கம் லிட்டில், மால்கம் எக்ஸ் ஆக மாறியபோது, ஒரு புரட்சியாளன் பிறப்பதை வாசகர்கள் உணரலாம். ஏன் எக்ஸ் என்று தேர்ந்தெடுத்தார்கள் என்ற விளக்கமும் நன்றாக சூளுரைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் மருதனின் தமிழுக்கு நன்றிகள்.

யார் இந்த மால்கம் ? அமெரிக்கா வெள்ளையர்களின் இனவெறி ஆதிக்கத்தில் இருந்தபோது கறுப்பின மக்கள் சக்கையாக நசுக்கப்பட்ட காலம் அது. மால்கம் தன்னுடைய தந்தையை கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடும் போராட்டத்தில் இழக்கிறார். போலீஸ், அரசியல்வாதிகள், மக்கள் என எல்லோரும் கறுப்பின மக்களுக்கு எதிரானவர்களே. மால்கம்மின் தந்தை கொலை செய்யப்படுகிறார். ஆனால், கோப்புகளில் அது தற்கொலை என்று பதிவேறுகிறது. ஆதலால், மால்கம்மின் தாய் அதற்கான காப்புரிமை பணத்தை முழுவதுமாக பெறமுடியாமற் போகிறது. கறுப்பின மக்கள் என்றால் ஆப்பிரிக்கா செல்லவேண்டும் அவர்களுக்கு இங்கு இடமில்லை என்ற எண்ணம் இருந்த கால கட்டம். மார்ட்டின் லூதர் கிங் கறுப்பர்களுக்காக போரிட்ட காலத்தில்தான் மால்கமும் தன்னுடைய போராட்டத்தை தன் இன மக்களுக்காக மேற்கொள்கிறார். அவருடைய அம்மாவிற்கு பைத்தியக்காரி பட்டம் கட்டுகிறது அரசு. அரசே அவளை மனநோயாளி காப்பகத்தில் வைத்து வைத்தியம் செய்கிறது. இல்லாத பைத்தியத்திற்கு வைத்தியம். மால்கம் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

ஒரு குடும்பத்தில் இணைசேராமல் இருக்கவேண்டிய இரண்டு விஷயங்கள் மால்கம் குடும்பத்தில் இணைசேர்ந்து இருந்தன. வறுமையும் குழந்தைகளும். மால்கம் வேலைக்குச் செல்கிறான். ஒரு முறை சூதுவிளையாடுபவர்களால் ஏமாற்றப்படுகிறான். மால்கம் திருட ஆரம்பிக்கிறான். தனது சுயலாபத்திற்காக திருட்டு தவறில்லை என்ற எண்ணத்திற்கு வருகிறான்.

யெல்லா என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. பாஸ்டன் செல்கிறான். அங்கு கறுப்பின மக்கள் சுதந்திரமாக இருப்பதை பார்க்கிறான். பிறகு அவனுடைய எண்ணத்தில் மாற்றங்கள் வருகின்றன. உண்மையில் அந்த சுதந்திரம் ஒரு மாயை. லேன்சிங் போன்ற இடங்களில் கறுப்பர்களை வெள்ளையர்களை நடத்தும் விதம் பற்றி கோபப்படுகிறான். தான் ஒரு தனி மனிதன் அல்ல, தனக்கென்று ஒரு இனம் இருப்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறான்.

மால்கம் ரெட் என்ற பெயருடன் வாழ்கிறான். காலணிகளுக்கு பாலிஷ் போடுகிறான். கழிப்பறையை சுத்தம் செய்கிறான். சிகரெட், கஞ்சா, அபின், க்ளப் என்ற அனைத்துப் பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறான். வெள்ளைக்கார பெண்களை சிலரை சேர்த்து ஒரு குழு அமைத்து கொள்ளையடிக்கிறான். பிடிபடுகிறான். 10 ஆண்டுகள் சிறைச்சாலை தண்டனை. அங்கு நூலகத்தைக் கண்டவுடன் மறுபடியும் படிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அப்போது மால்கமிற்கு வயது 21.

ரெஜினால்ட் என்பவர் சிறையிலிருந்து அவன் தப்பிக்க வழி சொல்கிறார். அல்லாவை அடைந்தால் தப்பிக்கலாம் என்கிறார். எலிஜா என்பவர் நேஷன் ஆப் இஸ்லாம் என்ற ஓர் அமைப்பை ஆரம்பிக்கிறார். கறுப்பினத்தவர்களுக்கு கடவுள் அல்லா என்கிறார். கடவுளையும், பாதிரியார்களையும் தகாத வார்த்தைகளால் திட்டிய சைத்தான் வேதம் ஓத ஆரம்பித்தது. ஆம், மால்கம் ஒரு ஆத்திகவாதியானார். அல்லாவே அவர் கடவுளானார். கடந்த கால வாழ்க்கையை பற்றி யோசிக்காமல், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்கிறார். தேடி தேடி சென்று புத்தகங்களையும் வரலாறுகளையும் படிக்கிறார்.

எலிஜாவை சந்திக்கிறார். நேஷன் ஆப் இஸ்லாமில் தன்னை இணைத்துக்கொள்கிறார். எலிஜாவை தன் ஆதர்ச குருவாக ஏற்கிறார். மிகக் குறைந்த நாட்களிலேயே மதகுருவாக ஆகிறார். அவரே கூட்டங்கள் நடத்தவும் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறார். உட்கட்சி பூசல் ஆரம்பிக்கிறது. எலிஜாவை ஏமாற்றி தலைவன் பதவிக்கு வர ஆசைப்படுவதாக மால்கம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதைப்பற்றி கவலையில்லை அவருக்கு.

பெட்டி எக்ஸ்ஐ திருமணம் செய்தார். எலிஜா வாழ்த்துக்களுடன். இயக்கம் கூட்டம் கறுப்பினர்களின் விடுதலை. குடும்பத்தை அவர் அவ்வளவாக கவனிக்கவில்லை. பாஸ்டனுக்கு வந்தபோது இருந்த மால்கமுக்கும் இப்போது உள்ள மால்கமுக்கும் அதிக வித்தியாசங்கள். ஜெர்மனி, ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற எல்லா நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார். பீடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார். அமெரிக்கா உள்ளேயே ஒரு கலகக்காரன் இருப்பதை அறிந்து பீடலுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆப்பிரிக்கா செல்கிறார். அவர்கள் எல்லாம் தன் இன மக்கள் என்று சொல்கிறார். மூதாதையர்களின் வீடு இது என்கிறார்.

எலிஜா மீது வெறுப்பு. அவர் வெள்ளையர்களை வெறுக்க மட்டுமே மால்கமுக்கு கற்றுகொடுத்திருந்தார். கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மால்கம் அளித்த பேட்டியில் எலிஜா மால்கமை 90 நாட்கள் கூட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்றும் அவரால் இயக்கத்திற்கு கெட்ட பெயர் என்றும் கூறினார். அந்த இடைப்பட்ட நாட்களில் இயக்கத்திற்கும் மால்கமிற்கும் எலிஜாவிற்குமான தொடர்பு எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்பதை இந்நூல் விவரிக்கிறது.

நேஷன் ஆப் இஸ்லாம் இல் இருந்து வெளியேறுகிறார் மால்கம். நான்கு நாட்களில் Muslim Mosque Inc என்ற அமைப்பை நிறுவுகிறார்.

பிப்ரவர் 21, 1965ஆம் ஆண்டு ஆதுபோன் நடன அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவரை பதினாறு தோட்டாக்கள் விழுங்கின்றன. அவருடைய கொலையின் பின்னணியில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

புத்தகத்தில் மிகவும் கவர்ந்த வாக்கியங்கள்

ஒரு பெருச்சாளியைப்போல் கட்டிலுக்கு அடியில் நூறு       ஆண்டுகள் பதுங்கிக் கிடப்பதற்குப் பதிலாக, சிறுத்தையைப்போல் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக் கொடுப்பேன்

கறுப்பர்களுக்கு கனவு காணும் உரிமை கூட இங்கு மறுக்கப்பட்டுள்ளது.

நீ ஏன் தொடர்ந்து படிக்கக்கூடாது என்று லாரா கேட்டபோது, மால்கமால் சிரிக்க மட்டுமே முடிந்தது.

வெள்ளையர்களுக்கு வெள்ளை மாளிகை. கறுப்பர்களுக்கு ?

ஒரு மனிதனின் நடத்தையைத் தீர்மானிப்பது அவன் சூழல்தான். அசிங்கமான சூழலில் அசிங்கமாகத்தான் நடந்துகொள்ள முடியும்.

அல்லவாவை நோக்கி நீ ஓரடி எடுத்து வைத்தால் அவர் உன்னை நோக்கி இரண்டடி எடுத்து வைப்பார்.

புதிய நிலத்தையும் மக்களையும் ஆக்கிரமிக்க வெள்ளையர்கள் கொண்டு சென்ற ஆயுதம், கிறிஸ்தவம்.  இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அதற்கு சாட்சி. முதலில் சிலுவை நுழையும், பிறகு பாதிரிமார்கள், பிறகு, அரசாங்க அதிகாரிகள், பிறகு, வணிகர்கள், பிறகு, மக்கள், அவர்களுக்கு பின்னால் ராணுவம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, அடிமைத்தனம். தீர்ந்தது கதை.

1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நாவில் உரையாற்ற கேஸ்ட்ரோவிற்கு அழைப்பு வந்தது. அப்போதே கேஸ்ட்ரோ முடிவு செய்துவிட்டார், மால்கமை சந்தித்தே ஆக வேண்டும் என்று.

பீடல் கேஸ்ட்ரோவிடம் சில வார்த்தைகள் பேசினாலே போதும் போராடும் உத்வேகம் வந்துவிடும்

mal x

நூல்  மால்கம் எக்ஸ்
பதிப்பகம் கிழக்கு பதிப்பகம், சென்னை.
ஆசிரியர் மருதன்
ஆண்டு 2008
பக்கங்கள் 152
விலை ரூ.185

Advertisements

One thought on “மால்கம் எக்ஸ் – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடிவெள்ளி !

  1. பீடல் கேஸ்ட்ரோவிடம் சில வார்த்தைகள் பேசினாலே போதும் போராடும் உத்வேகம் வந்துவிடும் என்பதை அதிகம் ரசித்தேன்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s