யாருடைய எலிகள் நாம் ?

நீங்கள் வங்கித் துறையில் வேலை செய்பவர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் துறையில் நடக்கும் ஊழல், நிஜம் இவற்றை திரையிட்டு காட்ட முடியுமா ? இந்த நூலாசிரியர் தன் கட்டுரைகள்மூலம் தான் இருக்கும் ஊடகத் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளைப் பற்றி அலசி ஆராய்கிறார். இது ஒன்றே போதும் இந்த புத்தகத்தின் மொத்தத்தையும் பற்றி புரிந்து கொள்ள. உண்மை. இதுதான் இந்த புத்தகத்தின் அஸ்திவாரம். வாசகர்கள் இந்த நிலைப்பாட்டை இந்நூலின் கடைசி கட்டுரை வரை உணரலாம்.

சமஸ் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக யாருடைய எலிகள் நாம் ? என்ற புத்தகம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.

உள்ளுர் அரசியல், உலக அரசியல், மொழி, கல்வி, கடல், நிலம், காடு, சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதாரம், வாழ்க்கைமுறை, சர்வதேசம், ஊடகம் போன்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகளை மிக யதார்த்தமான நடையில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். கட்டுரைகள், கட்டுரைகள் என்ற நிலையில் இல்லாமல் வாசகர்களை அழைத்துச்சென்று அறுதியிட்டு கூறி வாசகர்களிடமே கேள்வியைக் கேட்டு முடிவை அவர்களிடமே விட்டு விடும் முறை மிகவும் பிரமாதம். சில கட்டுரைகளை படித்து முடித்த பின் நாமும்தான் அதற்கும் உடந்தை என்ற குற்ற உணர்விற்கே தள்ளிவிடுகிறது. சில இடங்களில் உள்ளூற மனதில் இனம் புரியா உணர்வினை ஏற்படுகிறது.

ஈழம் பற்றிய விவாதங்கள், அண்ணா நூலகம் பற்றிய கட்டுரை, சமச்சீர் கல்வியைப் பற்றிய கட்டுரைகள், மீடியாவின் உண்மை முகம்,  காடு வளம் அழித்து முன்னேற்றம் என்ற மாயை பற்றிய செய்திகள், மன்னார்குடி குளங்கள் அழிந்த கதை, கல்விமுறை, மாணவ மாணவியர்களின் உளவியல் ரீதியாக வந்த செய்திகளின் விவாதம் மிகவும் அருமை. மாஸ்கோவின் மல்லிகை ? , யாருடைய எலிகள் நாம் ? சர்வாதிகாரம் X ஏகாதிபத்தியம் போன்ற கட்டுரைகள் உலக அரசியலை வாரி விளாசுகிறது.

சில கட்டுரைகளில் நாம் அதிக உணர்ச்சிவசப்படுகிறோம் என்று அவரே எழுதிவிட்டு, உணர்ச்சிவசப்படக்கூடிய கட்டுரைகளையே தந்திருக்கிறார். நேர்எதிர்மறை எண்ணங்களுடன் சில கட்டுரைகளை எழுதியிருக்கலாம். எதிர் மறை அதிகமாக இருப்பதைப்போல் ஓர் உணர்வு. ஆனாலும் அவை உண்மை, அதை மறுப்பதிற்கில்லை. உண்மை உடனுக்குடன் என்று ஊடக சேனல்கள் வந்தாலும் உண்மையை அலசி ஆராய்ந்து வரலாற்றுடன் ஒப்பிட்டு தற்போதைய நிலையையும் சொல்லும் உத்தி பாராட்டத்தக்கது.

தன் ஒட்டு மொத்த கட்டுரைகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் மீடியா பற்றிய கட்டுரையை கடைசி கட்டுரையாக வைத்து புத்தகத்தை வடிவமைத்தது மிக நேர்த்தி. நாம் வாழும் சம காலத்தில் இப்படி ஒரு பத்திரிகையாளன் முடிந்தவரை உண்மையை சூளுரைத்து சொன்னதே நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கான ஓர் உதாரணம்.

வங்கியியல், மென்பொருள் ஏற்றுமதி, முதலீடு வங்கியியல் போன்ற தலைப்பிலான கட்டுரைகளை ஆசிரியரின் அடுத்த நூலில் நாம் காண்போம் என நம்புகிறேன்.

கட்டுரை தொகுப்பில் பிடித்தவைகள் பல அவற்றுள் சில,

அரைகுறைகளும் அபத்தக் களஞ்சியங்களும்தான் தமிழ்ச் சமூகத்தில் இன்றைய ஆய்வாளர்கள்.

உண்மைகளைவிடவும் கனவுகள், கற்பனைகள், புனைவுகளுக்கே மரியாதை கொடுத்து பழகிவிட்டோம்.

நூறு ரூபாய் செலவில்லாமல், ஒரு மணிநேரம் காத்திருக்க வைக்காமல் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்கின்றன அரசுப் பள்ளிகள். கூடவே, பாடப் புத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி என நீள்கிறது திட்டம்.  ஆனால் படாத பாடுபட்டு தனியார் பள்ளிகளில் பல லட்சம் கொடுத்து பிள்ளைகளை சேர்த்து துடியாய் துடிக்கிறோம்.

சோவியத் இந்தியர்களால் இந்தியாவைத் தாண்டி அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு தேசம். அந்த நாட்களில், தமிழகத்தில், ‘மோகமுள்ளும்’, ‘பொன்னியின் செல்வனும்’ இல்லாத வீடுகளில் கூட மக்ஸிம் கார்க்கியின் ”தாய்” இருந்திருக்கும்.

Yaarudaiya_eligal_naam__33380_zoomநூல்  யாருடைய எலிகள் நாம்?
பதிப்பகம் துளி வெளியீடு, சென்னை
ஆசிரியர் சமஸ்
ஆண்டு 2014
பக்கங்கள் 384
விலை ரூ.300

Advertisements

One thought on “யாருடைய எலிகள் நாம் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s