தாய்

 “இதுவரை, புறத்தூண்டுதலின்றி உள்ளுணர்வு உந்தப் புரட்சிப் போராட்டத்தில் தாமாகவே தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆனால் இப்பொழுது தமக்குப் பயன்படும்படி “தாய்” படிக்கலாம்’._ விலாடிமிர் லெனின்.

மக்ஸிம் கார்க்கி 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள நீழ்னி நோவ்கிராட் என்றும் இடத்தில் பிறந்தார். சிறுவயது முதலே உழைப்பின் மீது பேரார்வம் கொண்டவர். உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒரவரான மக்ஸிம் கார்க்கியின் மகத்தான படைப்பு “தாய்”.  உலக இலக்கியப் படைப்புகளில் சிறந்தவற்றை நாம் வரிசைப் படுத்துவோமானால், அதில் கார்க்கியின் ‘தாய்’ கட்டாயம் இடம் பெறும்.

பெலகேயா நீலவ்னா, பாவல் விலாசவ் எனும் தாய்-மகனுக்கு இடையேயான அன்பின் அற்புதப் பிணைப்பின் உணர்வுபூர்வ உள்ளடக்கமே இந்நாவல்.  ஒரு தாயின் பாச உணர்வு, தன் மகன் மீதான அளப்பரிய அன்பால், கொள்கையின் மேல் ஏற்பட்ட பிடிப்பால், கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது ஒரு ஈடுபாடு உருவாகி, தாமே விதையாக வீழ்வதை தேர்ந்த இலக்கிய நடையுடன் விவரிக்கும் படைப்பே “தாய்”.

பேச்சு, நடை என ஒவ்வொன்றிலும் அடக்குமுறையை நொறுக்கும் நடாஷா. மகனுக்காக முதலில் பரிதாபத்தாலும், பயத்தாலும் உறைந்து, பின் புரட்சியை முன்னெடுக்கும் ’தாய்’ நீலவ்யா பெலகேயா, புரட்சியாளர்களுக்கு உதவும் சோபியா என நாவல் நெடுகிலும் பெண்களின் ஆட்சி.

உலகில் எல்லா மதங்களுக்கும் ஒரு புனித நூல் உண்டு. கம்யூனிசம் ஒரு மதம் என்றே நான் கூறுவேன். பிற்காலத்தில் அது அரசியல் கட்சியாக மாறியிருக்கலாம். ஆனால் கம்யூனிச தத்துவங்களை ஆழ்ந்து படிக்கையில் அது ஒரு வாழ்வு முறை என்பதும் அதன் சிந்தனையில் ஆழ்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் ஒரு விஷயம். அனைத்தும் அனைவருக்கும் என்ற சித்தாந்தம் பொருந்திய ஒரு மாபெரும் கொள்கையை கொண்ட மதம். இந்த மதம் அனைவரையும் அரவணைக்கும்.

ஆனால் இந்த மதத்தை பிடிக்காதவர்களும் சிலர் உண்டு. ஆம். அவர்கள்தான் முதலாளிகள் என்ற முதலைகள். இந்த மதத்தின் எதிராக உள்ள தி.க உறுப்பினர்கள்தான் இந்த முதலாளிகள். உலகில் என்றுமே மாறாத ஒரு விஷயம் ஒருவன் வேலைகொடுப்பவன் ஒருவன் வேலை செய்பவன். ஆனால், வேலை செய்பவன்தான் என்றுமே கூலி, நேரமேலாண்மை, சங்கம், போனஸ், ஊதிய உயர்வு, முதலாளி சுரண்டல், உழைப்பு திருட்டு என்று பலதரப்பட்ட விஷயங்களை பற்றி பேசுபவனாகவும், அவனும் அவனை சேர்ந்தவர்களும்தான் இதைப்பற்றி உணர்வுப்பூர்வமாக புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதுவார்கள். இந்த உலகில் முதலாளிகளுக்கென்று ஒரு குரல் ஒளித்ததே கிடையாது. முதலாளிகள்  தொழிலாளர்கள் மூலம் சுரண்டப்படுகிறார்கள், வேலையே பார்க்காமல் சம்பளம் கேட்கிறார்கள் போன்ற விஷயங்கள் என்றுமே எழுந்ததில்லை. ஏன் ? ஏனென்றால் அவை எதுமே என்றுமே நடந்ததில்லை.  நடக்கப்போவதுமில்லை.

ஒரு அடிமட்ட தொழிலாளியாக இருந்து படிப்பறிவே இல்லாமல் கார்க்கி எழுதிய இந்த புத்தகத்தில் இலக்கிய நடையையும் தாண்டி கம்யூனிச கொள்கையை வாசகர்களுக்கே தெரியாமல் ரத்தத்தில் ஏற்றியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பின் எனக்கு எழுந்த ஒரே ஒரு ஆசை.

ஒரு பெரிய பணக்கார தொழில் அதிபர். பணத்தை ஒரு பொருட்டாக மதிக்காத ஒருவன். எதையும் பணத்தால் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் கொண்டவன் ஒருவனின் கையில் இந்தப் புத்தகத்தை பார்க்கவேண்டும். இந்த ஆசை ஒரு விபரீத ஆசைதான். ஒரு தொழிலாளியின் கைகளுக்கு சாட்டை எப்படி வந்து சேராதோ அதுபோலத்தான் இதுவும்.

தாயை படியுங்கள். உங்கள் வேலைமீது நீங்கள் கொண்டுள்ள பிடிப்பினையை உணருங்கள். அனைத்திற்கும்மேல் உண்மையை கண்டுகொள்ளுங்கள். நீங்கள் எல்லாம் எதனால் எப்படி கட்டப்பட்டு உள்ளீர்கள் என்பதை உணருங்கள்.  உண்மையை உணரும்போது ஒருவித வேகம் வருவதுபோல இருக்கும், ஆனால் எந்த மாற்றமும் இங்கு வரப்போவதில்லை, எந்த புரட்சியும் வெடிக்கப்போவதில்லை, உங்கள் குரல் தாழ்ந்துபோய் யாரும் உங்கள் குரல்வளையத்தில் நிற்கப்போவதில்லை, ஏனென்றால் இது ரஷ்யா அல்ல. நீங்கள் பாவெலும் இல்லை. நான் நீலவ்னாவும் இல்லை.

பணக்காரன் ஆகும் வரை நாமெல்லாமே கம்யூனிசவாதிகள்தானே ?

நாவலில் பிடித்த வசனங்களில் சில…

“ஒரு பெண் சங்கீதத்தைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் அவள் துக்கமாயிருக்கும்போது……”

“முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது”

“நல்லவர்கள் என்றுமே அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை; நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதுமே ஒட்டிக் கொள்வார்கள்”.

“மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். பாசம். “

“எந்த மனிதன் சிரித்துச் சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ, அவனது இதயத்தில்தான் வேதனை இருந்துகொண்டே இருக்கிறது.”

 

IMG_0033-500x500_0

நூல்  தாய்
பதிப்பகம் நியூ சென்சுரி புக் அவுஸ்
ஆசிரியர் மாக்ஸிம் கார்க்கி
ஆண்டு 2013
பக்கங்கள் 598
விலை ரூ.400

Advertisements

One thought on “தாய்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s