இண்டிபென்டன்ஸ் டே ரிசர்ஜன்ஸ்

இண்டிபென்டன்ஸ் டே ரிசர்ஜன்ஸ்

இன்றைய ஐமேக்ஸ் அல்லது சத்யம் சினிமாஸ் போன்ற தியேட்டர்களை பிரம்மாண்டமாக பார்க்கும் அதே கோணத்தில் இருந்தது அன்றைய தியேட்டர் ராஜராஜன் . தஞ்சையின் முதல் டிடிஎஸ் தியேட்டர், அகலமான ஸ்கிரீன், படம் ஆரம்பிக்கும்போது சிகப்பு ஸ்கிரீனில் அழகிய வண்ண லைட்டுகளுடன் சில இசையுடன் திரை மேல செல்லும். பார்க்க அழகாக இருக்கும். அப்போது முதல் வகுப்பு 20 ரூபாய் பால்கனி 25 என நினைக்கின்றேன். ஏசியும் உண்டு இப்போது மல்டிப்ளக்ஸ்இல் உள்ள சீட்டிங் முறைப்படி சீட்கள் இருக்கும். யார் முன்னாள் அமர்ந்தாளும் திரை மறைக்காது.

பிரம்மாண்டமான படங்களை பிரம்மாண்டமான திரையில் பார்ப்பதுதானே உசிதம். எடுத்துக்காட்டுக்கு, டென் கமாண்ட்மென்ஸ் யாகப்பா தியேட்டரில்
பார்த்தது, இரண்டு இன்டர்வல்கள். பென்கர், உமர் முக்தார், ஈவில் டெட் போன்ற படங்களை யாகப்பா, ராணிபேரடைஸ் போன்ற தியேட்டர்களில் அப்போது பார்த்திருக்கிறேன். உலக சினிமாக்களை அவர் தன் தந்தையுடன் சென்ற சினிமாக்களையும் மற்றும் நாளிதழ் மூலம் படித்துதெரிந்துவிட்டு என்னுடன் பகிர்ந்து பிறகு தியேட்டருக்கு அழைத்துச்சென்றும் காண்பித்துவிடுவார் அப்பா.

அந்த க்ளாசிக் வரிசையில் லேட்டஸ்ட்டாக அப்பா அழைத்துச்சென்ற திரைப்படம் ‘கிளாடியேட்டர்’ வருடம் 2000 அதன் பிறகு நாங்களே படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டோம். இப்படியும் சொல்லாம் 16 வருடங்களாக அப்பாவுடன் நாங்கள் படம் பார்க்கவே இல்லை என்று. அவரும் தியேட்டர் செல்வதை மிகவும் குறைத்துக்கொண்டார். பௌத்தம் படம் பார்க்கும் ஆசையை கூட குறைத்துவிடும் போல. இன்று காலை தொலைபேசிமூலம் மறவாமல் இன்று இண்டிபென்டன்ஸ் டே போய்வரவும் என்று சொன்னேன்.

“அப்பாவுடன் சென்ற ஆங்கிலப்படங்கள்” என்று ஒரு புத்தகமே போடலாம், அவ்வளவும் நினைவுகள்.

சரி மேட்டருக்கு வருவோம்.

1996ஆம் வருடம் தியேட்டர் ராஜராஜன், தஞ்சாவூர். இண்டிபென்டன்ஸ் டே என்று ஆங்கிலத்தில் அகலத்திரையில் டிடிஎஸ் சத்தத்துடன் படத்தின் பெயர் போடப்பட்டது. முடிந்த அளவு முக்கியமான வசனங்களை தமிழில் அவ்வப்போது அப்பா சொல்லிவிடுவார். சில நேரங்களில் என்ன என்ன என்று நச்சரிப்பேன். காமெடிக்கு சிலர் மட்டும் சிரிக்கும்போது நமக்கு மட்டும் ஏன் புரியவில்லை என்று தோன்றும். செவிடன் போல் காட்டிக்கொண்டு படத்தை தொடர்ந்து பார்ப்பேன். இப்போதும் கூட ஸ்லேங் புரியாமல் பார்ப்பதுண்டு, மற்றவர்கள் சிரிப்பார்கள் பேக்கு மாதிரி பார்த்துக்கொண்டிருப்பேன். தேங்ஸ் டு சப் டைட்டில்ஸ்.

அப்படி புரிந்தும் புரியாமலும் சிறுவயதில் பார்த்த அந்த திரைப்படத்தை அவ்வப்போது ஸ்டார் அல்லது எச்பிஓ வில் ஒளிபரப்பும்போது பார்ப்பதுண்டு. பழைய நினைவுகள் எல்லாம் வரும். நான் ஒரு பழைய நினைவு பைத்தியம். நோஸ்டால்ஜிக் என்று கூறி நிகழ்காலத்திலேயே கடந்த காலத்தின் நினைவுகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பைத்தியம்.

அதே குழந்தைதனத்துடன் நேற்று இண்டிபென்டன்ஸ் டே ரிசர்ஜன்ஸ் சென்றிருந்தேன். அந்த படத்தில் வந்த அதே பிரசிடன்ட் ஒரு கெட்ட கனவு காண்பது போல படம் ஆரம்பித்தது. வயசான தாடி வைத்த எக்ஸ் பிரசிடண்ட். வில்ஸ்மித்தின் மகன். பழைய டாக்டர். அந்த அப்பா மகன் டெக்கீஸ்.

விஷயம் என்னவென்றால் டைட்டில் போடுவதில் அதே முறையை பின்பற்றி கலக்கியிருந்தார் டைரக்டர். காண கண் கோடி வேண்டும் போல இருந்தது. வித்தியாசம். இது 3டி. ஆங்கிலத்தில் ஸ்பெக்டகுலர் என்று சொல்வார்கள் அதை அனுபவிக்க இம்மாதிரி திரைப்படங்களை தியேட்டரில் போய்தான் பார்க்க வேண்டும்.

மூன்று நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன் நேரம் இருக்கும்போது சொல்லுங்கள் ஐமேக்ஸ்ல் போய் பார்ப்போம் என்று. அதற்குள் இருப்பு கொள்ளவில்லை டிக்கட்டை டபக்கென்று புக்செய்துவிட்டேன்.

இன்னொரு முறை அவருடன் ஐமேக்ஸ்இல் சென்று பார்க்க எனது விருப்பத்தையும் இதன் மூலமே தெரிவித்துவிடுகின்றேன்.

index
IPD 1996
IPD
IPD 2016
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s