ஆச்சி மரகதம்

அவசரம். பதற்றம். என்று ஓடுகிறது வாழ்க்கை. நிதானத்தை தக்க வைக்க எவ்வளவோ முயற்சி பண்றேன் ஆனால் தோற்றுப்போய்விடுகிறேன். நிதானத்தை வளர்த்துக்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் வேற என்ன செய்யமுடியும்ன்னு என்னை நானே கேட்டுக்க ஆரம்பிச்சபோதுதான் மரகதம் ஆச்சியின் நினைவு வந்தது.

பொறுமை. நிதானம். இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் மரகதம் என்று அகராதியில் இருக்கலாம். எனக்கு விவரம் தெரிந்து நான் ஆச்சி என்று அழைத்த பெண்மணி இவர். என் வாழ்நாளில் நான் இந்த ஆச்சியை கோபப்பட்டோ முகம் கடுகடுன்னோ இருந்து நான் பார்த்ததேயில்லை.

என்னதான் கணவன் அலறிக்கொண்டு சண்டையிட்டாலும், பிள்ளைகள் கத்திக்கொண்டாலும், பேரன்கள் அலுச்சாட்டியம் செய்தாலும் என்றுமே தன் குரல் தொணியை மாற்றாமல் அவருக்கே உண்டான ஒரு நிதானமான பேச்சில், ஏண்டா இப்படி பண்ற ? உன் நல்லதுக்குத்தானே சொல்றோம், இவரு எப்பவும் இப்படித்தான், அப்படியே பழகிடுச்சு, அவர் குணம் அப்படி என்ற ஓரிரு வார்த்தைகள் கொண்ட தன் நிதான பேச்சில் சம்பந்தப்பட்டவர்களின் கோபத்தையும் கொதிப்பையும் அடக்கிவிடுவார்.

தாத்தா. கோதண்டபானி. பார்க்கதான் சாதுவாக இருப்பார். கோபப்பட்டார் எனில் அவ்வளவுதான் பூகம்பம் வெடிக்கும். மிகவும் நல்ல மனிதர். சந்துக்குள்ள ஓடாதீங்கடான்னு திட்டுவார், மாடியில ஏறாதீங்கடான்னுவார், அதே சமயம் கொஞ்ச நாழி கழித்து புளிப்பு மிட்டாய் வாங்கித் தருவார், எங்களுடைய பெவரைட் பாய் கடையில். அவரை நினைத்தால் பீடி வாசமும் கூடவே வந்துசேரும். தாத்தா ஆச்சியின் பெயரை சொல்லி கூப்பிடும் அந்த அழகே தனிதான். வீட்டுக்கு உள் அவர் நுழையும்போதே மரகதம் என்ற பெயர் நுழைந்துவிடும். செருப்பை கெழட்டிப்போட்டுக்கொண்டே கூவிக்கொண்டே உள்ளே வருவார். அவர் புராணம் ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் ஆச்சியிடம் வருவோம்.

எப்பா பாத்தாலும் நம்ம பசங்க நல்லபடியா இருக்கனும் சந்ததோஷமா இருக்கனும் இதையே அடிக்கடி சொல்லுவாங்க. நலம் விசாரித்துவிட்டு இயற்கையாக ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் அவ்வளவுதான். உள்ளுக்குள்ள எந்த கஷ்டம் இருந்தாலும் சிரிச்ச முகத்தோட எப்போதுமே வரவேற்பார்கள், அதில் எந்த குறையும் யாரும் சொல்லிவிட முடியாது.

என்ன… டீ போடும் போதும் மட்டும எப்போதுமே சர்க்கரை அதிகமாகத்தான் போடுவார்கள். எனக்கு டீ பழக்கம் ஆரம்பித்ததே அந்த வீட்டில் இருந்துதான்.

பசங்க அல்லது பேரன்கள் யாராவது பிரச்சினையில இருந்தா அப்படியே இடிஞ்சி போய்டுவாங்க. அத பத்தியே யோசிப்பாங்க. கண்ணு கலங்கனபடியே அவங்க துயரத்த சொல்லுவாங்க. அவங்கள அப்படி பாக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஏன்னா மத்தவங்க பிரச்சினைய தன் பிரச்சினைன்னு நினைக்குற மனசு இருக்கற மனுஷங்க ரொம்ப கொஞ்சம்தான். எதையும் நம்பிடுவாங்க. நாம சொல்ற எதையுமே நம்பிடுவாங்க.

இந்த விட்டுக்கொடுக்குற பழக்கம், சகிப்புத்தன்மை இதெல்லாம் எப்போதுமே கடைபிடிக்கணும்ன்னு ஆசை இருக்கே ஒழிய அதை செய்ய முடியல. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி ஆச்சிய பார்க்க போயிருந்தேன். நிலக்கடலை கூட்டை உடைத்து உடைத்து கடலையை மட்டும் எடுத்துக்கொடுத்து சின்ன புள்ளைக்கு கொடுக்கற மாதிரி சாப்புடு சாப்புடுன்னுஅவங்கபாட்டுக்கு பேசிக்கிட்டே இருந்தாங்க. அவங்க கண்ணுக்கு நான் இன்னும் அந்த 2 வயசு சின்ன பையன் மாதிரித்தான் தெரிவேன் போல.

ஆச்சியுடன் அந்த கொஞ்ச நேர பேச்சிக்கு அப்பறம் ஒரு நிதானம் இருக்கனும்ன்னு எனக்குள் தோணும் ஆனா அடுத்த ஒரு மணி நேரத்துல அந்த வைராக்கியம் பறந்து போய்டுது. ஆனா கண்டிப்பா நிதானத்த வளர்த்துக்க முடியும்ன்னு நம்பிக்கை இருக்கு. முக்கியமா பேச்சில நிதானத்த வளர்த்துக்கணும் இப்போதைக்கு அது ரொம்ப முக்கியமான ஒரு தேவையாக இருக்கிறது.

ஏன்னா பேசிய வார்த்தைகளுக்கு அந்த வார்த்தைகள்தான் நமக்கு அதிபதி, பேசாத வார்த்தைகளுக்கு நாம்தானே அதிபதி.

 

images

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s