நன்றிக்கடன்….

இளநீர் வெட்டும் போது கீழே சிந்தும் இளநீர்த் துளிகள் எல்லாமே மரம் நட்டவரையே போய்ச் சேருகிறது. அந்த முதல் மரியாதையை, தன்னை நட்டவருக்கு செலுத்திய பிறகே நம்மிடம் வந்து சேருகிறது அந்த இளநீர். இதை ஒவ்வொரு முறையும் இளநீர் தவறாமல் செய்கிறது.

ஆகா… எப்படிப்பட்ட குணம் அந்த இளநீருக்கு ! மனிதனும்தான் இருக்கிறனே ?

TENDER COD
Advertisements

நிழல் ?

பங்குனி வெயிலில்
புறவழிச்சாலையில்
மிதிவண்டிப் பயணம்…..

பரந்துவிரிந்த சாலை
நான்கு வழிச் சாலை
மரமில்லை காற்றில்லை
ஒரே வெயில்.

பயண நேரம் குறைவு
சீரான சாலை
உடல் சோர்வு இல்லை
அசதியில்லை
துரிதப் பயணம் சொகுசு
காரினிலே…ஏசி வசதியுடன்
இளைப்பார நின்றான்
சொகுசுக் கார் காரன்

நடைவழியே வந்த வழிபோக்கன்
நிழலில் நிற்க வழியின்றி
தார் பாயைத் தலையில்
விரித்தபடி நின்றிருக்க

காரினில் இருந்து வெளியே
வந்தவன்
“அப்பப்பா… என்ன அசதி
ஒரு இளநீர் வெட்டுப்பா…
கொஞ்சம் வழுக்கையா..
கொஞ்சம் தண்ணியா…”

மறுபடி தொடர்ந்தது எனது
வெட்டைவெளி மிதிவண்டிப்
பயணம்

மரமில்லா சாலைகள்
நாட்டின் துரிதப் பயணங்கள்
நாட்டின் வளர்ச்சியை காண
அந்த அசோக சக்கரவர்த்தி
இல்லையே !

நாம் அனைவருமே புகைப்படக் கலைஞர்களே….

எத்தனை கோடிகள்
கொடுத்தாலும்  விலைக்கு
வாங்க முடியாத கேமிரா.

ஆட்டோ போகஸ் உண்டு..
நைட் விசன் உண்டு..
ஸட்டர்  ஸ்பீடு உண்டு…
ஆட்டோ ரீசார்ஜ் உண்டு..
இன்னும் பல
அம்சங்கள் உண்டு….

வேலை முடிந்து செல்லும்
முன் நம்  கேமிராவை
யாரிடமாவது விட்டுச்செல்வோம்….

கண்கள் ….
_பாரத் ஜ.

KodakEktralite10_1_index

கதர் கனவு…. கலைந்த கதை…

வெள்ளை கதர் ஆடை அணிய
பல வருட ஆசை
காதிபவனிலிருந்து கதரை
கொணர்ந்து தைத்து
அழகு பார்த்து
அணிய யெத்தனித்தபோது…

ஒரு சிறிய தடங்கல்..
மனசாட்சியின் தடங்கல்…
வெள்ளைசட்டை அணிய
யோக்கியதை உனக்குண்டா ?
என்றது..

மனதில் தீய எண்ணம் சிறிதும்
அது தீயதே…
உன்னுள் அது பலமடங்கு …
கதரை கறையாக்காதே
என கூறி மறைந்தது…

அதற்கு சுத்தமான மனதும்
தெளிந்த மனமும்
நேர்மையும் பொய்யாமையும்
தன்னகத்தே கொண்டுள்ள
ஒரு மனிதனுக்கே
வாய்த்தது….

தினம் தினம் என்னை
சுத்தப்படுத்தி அதை அணிய
முயற்சிக்கிறேன்….

இன்றுவரை…
என்னால் அணிய
இயலவில்லை…
கதர் ஆடையயை….

அவற்றிற்கும் எனக்கும்
தொலைவு அதிகம்…

என் கதர் கனவு
கலைந்தது… பின் தொலைந்தது…

_பாரத் ஜ
indira_kamaraj_morarji

விரல்.. உதடு…சமிஞ்கை… ஏன் இந்த அவசரம் ?

நடப்பவரோ அல்ல
வாகனத்தில்
பறப்பவரோ…

அது என்ன
போகிற போக்கில்
உதட்டிலும்
நெஞ்சிலும் விரல்படும்படி
ஒரு சமிஞ்கை ?
அதுவும் அந்த
முச்சந்தி பிள்ளையார்
சன்னதியை பார்த்து ?

உங்கள் கடவுள்
பக்தியின்
ஆழம் இவ்வளவுதானா ?

_பாரத் ஜ

தேநீர் நேரம் … கற்ற பாடம்…

மாலை ..
தேநீர் நேரம்

தொண்டை தண்ணீர்
வற்ற பெண்ணியம்
பேசி வந்தேன்

எதிரே இரு
பெண்கள்
நேர்க்கோட்டில்
நடந்து வர

வர வர நடந்தேன்
கிட்ட வந்தேன்
வழிவிட அவர்களால்
மட்டுமே முடியும்..
இடம் அப்படி…

கடைசியில்
நான் ஒதுங்கினேன்
மிக சிரமத்துடன்

அவர்கள் சென்றார்கள்

பெண்ணியம் பேசியதற்கு
கிடைத்த பரிசு

_பாரத் ஜ

எனக்கு கவிதை வராது…

கிராமாயணத்தை மறந்துவிட்டு – நகரில்
உட்கார்ந்து ராமாயணத்தை
படித்தால் அந்த ராமரா
சோறு போடுவார்… ?கொஞ்சம் கிளாமரா – கவிதை
எழுத நான் என்ன வாலியா
அல்லது
கண்ணதாசனா ?கிராம வாழ்க்கை மறந்து
நகர வாழ்க்கை நாடிய
நானும் ஒரு
சம்பளதாசனே…

அட நானும் ஒரு சம்பளதாசனே !

_ பாரத் ஜ.