“அண்ணன் ஒபாமா” எங்களுக்கு தேவையில்லை: காஸ்ட்ரோ

Fidel Castro rails against ‘Brother Obama’ after US president’s trip to Cuba_Nina Lakhani and Agencies

ஒபாமாவின் வருகை குறித்து பீடல் காஸ்ட்ரோ எழுதிய கடிதத்தின் சாராம்சத்தின் செய்தி 28 மார்ச் 2016 அன்று தி கார்டியனில் வெளியானது. அதனுடைய தமிழாக்கம் இங்கே.

கியூபாவிற்குக் கடந்த வாரம் பராக் ஒபாமா மேற்கொண்ட பயணம் குறித்தும், அமெரிக்க கியூபாவின் உறவு குறித்தும் பீடல் காஸ்ட்ரோ ஒரு பெரிய கடிதத்தை எழுதியுள்ளார். இதன் மூலம் கியூபா மறுபடியும் தன்னுடைய தன்னாட்சி சுதந்திரத்தை உறுதிபடுத்துகிறது என்றும் எங்களுக்கு எந்த ஒரு ஏகாதிபத்தியத்தின் தயவும் தேவையில்லை என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

1500 வார்த்தைகள் கொண்ட அந்தக் கடிதம் அண்ணன் ஒபாமா என்று தொடங்குகிறது. இரு நாட்டிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போரை புதைத்து வைக்கவே தாம் கியூபா வந்ததாக ஒபாமா  கூறினார். அதற்கு இதுவே காஸ்ட்ரோவின் பதிலாகும் என்று கருதப்படுகிறது.

ஹவானாவில் பேசுகையில் ஒபாமா, இந்த இரு நாடுகளும் ஒன்று சேர்ந்து நண்பர்களாக, அண்டைநாடுகளாக, ஒரு குடும்பமாக செயல்பட இதுவே சிறந்த நேரம் என்று கூறியிருந்தார்.

காஸ்ட்ரோ தனது கடிதத்தில் அதை நிராகரித்து. ஒபாமாவின் வார்த்தைகள் தேன் முலாம் பூசப்பட்ட வார்த்தைகள் என்று வருணித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி உதிர்த்த இந்த வார்த்தைகளைக் கேட்ட கியூபர்களுக்கு மாரடைப்பு கூட வரலாம் என்று கூறியுள்ளார்.

60 வருடங்களாக கியூபா  மீதான பொருளாதார தடையை ஒபாமா மறக்கச்சொல்கிறார் என்கிறார் காஸ்ட்ரோ. காஸ்ட்ரோக்கு எதிராக 1961ஆம் ஆண்டு நிகழ்ந்த பே ஆப் பிக்ஸ் தாக்குதல் மற்றும் 1976 நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 73 பேர் இறந்துள்ளனர்.

தன் மூன்று நாள் கியூபப் பயணத்தின் போது ஒபாமா 89 வயதுள்ள முன்னாள் அதிபர் பீடலைப் பார்க்கவோ அல்லது மேற்கோள் கூறவோ இல்லை, இருப்பினும் 84 வயதுள்ள அவருடைய தம்பியும் தற்போதைய அதிபருமான  ரால் காஸ்ட்ரோவோடு பல முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் கியூபப் பயணத்தின் நோக்கம் பற்றி குறிப்பிடுகையில், கியூப மக்களை ஆதிக்கத்திற்கு உள்ளாக்கவும், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆண்டுகொண்டிருக்கும் கம்யூனிச அரசை கவிழ்க்கவும், புதிய பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை கொண்டுவரவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்கிறார்.

பீடல் காஸ்ட்ரோ ஒபாமாவிற்கு எழுதுகையில், கியூபாவின் அரசியலைப் பற்றி எந்தவொரு ஒரு கோட்பாடும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்று அது தன்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்றும் கூறுகிறார்.

பல மணி நேரம் பேச வல்லமை படைத்த காஸ்ட்ரோ, பல ஆண்டுகளாக கியூபாவை ஆட்சி செய்தவர். 2008ஆம் ஆண்டு தனது தம்பியிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்தார். காஸ்ட்ரோவின் இந்தக் கடிதமானது, ஹவானாவில் கடந்த வாரம் ஒபாமா பேசிய முற்போக்கு பேச்சிற்கும் சற்றும் மாறாகவே உள்ளது.

ஸ்பானியர்டுகளுக்கு சூழ்நிலை மூலம் கொடுக்கப்பட்ட தொந்தரவுகள், கியூபாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஜோ மார்த்தி, அண்டானியோ மேக்கோ மற்றும் மேக்ஸிமோ கோம்ஸ் பற்றிய செய்திக் குறிப்புகளோடு காஸ்ட்ரோவின் கடிதம் ஆரம்பிக்கின்றது.

ஒபாமாவின் முக்கியமான பேச்சை வரிவரியாக விமர்சிக்கும் காஸ்ட்ரோ, 1959க்கு பிறகு காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் அவமானங்களையே க்யூபாவிற்கு தந்துள்ளனர், க்யூபாவின் எந்த துறை வளர்ச்சிக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதிகள் பாராட்டு கூறியதே இல்லை ஒபாமாவின் உட்பட.

க்யூபாவில் அமெரிக்காவிலும் பூர்விக மக்களை கொன்றுகுவித்த விஷயத்தை பற்றிப் பேசாததற்கும்,  சுகாதாரம் மற்றும் படிப்பில் கியூபாவை அங்கீகரிக்காததற்கும், தென் ஆப்பிரிக்க இன வெறி பிரச்சினையில் அணு ஆயுத உதவி செய்யாததற்கும் குற்றம் சாட்டுகிறார் பீடல்.

பீடல் காஸ்ட்ரோ ஒபாமாவிற்கு எழுதுகையில் (தென் ஆப்பிரிக்காவில் அமெரிக்க மற்றும் க்யூபாவின் நிலை, அங்கோலாவில்), க்யூபாவின் அரசியலை பற்றி எந்து ஒரு கோட்பாடும் எழுத முயற்சிக்க வேண்டாம் என்பதைத் தன்னுடைய தாழ்மையான வேண்டுகோளாக விடுப்பதாகக் கூறுகிறார்.

ஒபாமாவின் நல்ல எண்ணத்தையும் காஸ்ட்ரோ அவர்கள் பறைசாற்றுகிறார். மேலும் ஒபாமாவின் எண்ணங்கள் மற்றும் போக்கு நல்லவையே. அவருடைய தாழ்மையான பக்குவமும் அறிவாளித்தனமும் போற்றப்படவேண்டியவையே என்கிறார்.

சுற்றுலா பற்றி குறிப்பிடுகையில், ரால் காஸ்ட்ரோவுடன் டிசம்பர் 2014ல் இருந்து ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை மூலம் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது என்கிறார். சுற்றுலாத்துறை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது என்றும் பல கோடி டாலர்கள் வருவாய் வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க கியூபா உடனான வியாபார ரீதியான தொடர்பிற்கு காஸ்ட்ரோவின் தயக்கம் அதிகமே. ஏனென்றால், 1959இல் காஸ்ட்ரோ பதவிக்கு வந்தவுடன், அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடைமையாக்கிவிட்டார் தற்போது கம்யூனிச நாடான க்யூபாவில் சந்தைப் பொருளாதாரத்தை அவர் தம்பி ரால் காஸ்ட்ரோ துவக்க நினைக்கின்றார்.

அமெரிக்க கியூப உறவை புதிப்பிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும், இறக்குமதியையே நம்பி இருக்கும் நிலை மாறும் நிலையும், பணத்தட்டுப்பாடு வராமலும் இருக்கும் என்று ஒபாமாவின் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு பதிலாக காஸ்ட்ரோ எழுதுகையில், இந்த நாடானது தன்னுடைய உரிமைமூலமும், ஆளுமையுடனும் விளங்கும், இதுவரை படிப்பு, வளர்ச்சி,அறிவியல் மற்றும் சமுதாயம் மூலம் பெறப்பட்ட வளர்ச்சியை யாரும் மாயை என்று கூற இயலாது.

பீடல் தன்னுடைய கடிதத்தை பின்வருமாறு நிறைவு செய்கிறார்.
“உதவி செய்யும் உங்களுடைய எண்ணத்திற்கு மனமார்ந்த நன்றி ஆனால் நன்றி தேவையில்லை. எங்களுக்கு தேவையான உணவு மற்றும் பொருட்களை தயாரித்துக்கொள்ள தேவையான வேலை மற்றும் அதற்கான மக்களை நாங்களே கொண்டுள்ளோம் அதற்கான தகுதியும் எங்களுக்குண்டு.”

கார்டியன் கட்டுரையின் இணைப்பு:
http://www.theguardian.com/world/2016/mar/28/fidel-castro-obama-cuba-trip

 

ScreenHunter_2115 Mar. 29 14.40
Photo Courtesy: The Guardian

 

Advertisements